சாலை பணி செய்தவர்களை தாக்கியவர் கைது

சாலை பணி செய்தவர்களை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-06-19 20:35 GMT

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவின் எதிரில் தேசிய நெடுஞ்சாலை பாலம் அமைக்க கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த ராஜா (வயது 39) சாலை பணி மேற்பார்வையாளராக உள்ளார்.

நேற்று காலை அவரது தலைமையில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது செம்புகுடிபட்டியை சேர்ந்த கார்த்திக் (32), பகவதி ராம் என்ற ராகுல் (26) இருவரும் அந்த பகுதியில் நடந்து வந்த போது சாலை பணியாளர்களிடம் ஜே.சி.பி. எந்திரத்தை இந்த பகுதியில் நிறுத்தக்கூடாது என்று தகராறு செய்தார்களாம்.

ேமலும் ஆத்திரம் அடைந்த அவர்கள், மேற்பார்வையாளர் ராஜா மற்றும் பணியாளர் அருண் பாண்டி(30) ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து ராகுலை கைது செய்தனர். கார்த்திக்கை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்