முதியவரை தாக்கியவர் கைது

நெல்லையில் முதியவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-03-01 19:19 GMT

நெல்லை பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது 60). இவர் சம்பவத்தன்று டவுன் லட்சுமி தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தென்பத்து பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (வயது 32) என்பவர் பாண்டி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கதிர்வேல் தகாத வார்த்தைகளால் பாண்டியை திட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிர்வேலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்