பெண் கவுன்சிலரை அரிவாள்மனையால் தாக்கியவருக்கு வலைவீச்சு
பெண் கவுன்சிலரை அரிவாள்மனையால் தாக்கியவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் கலைவாணி (வயது 35). இவர் நகராட்சி 35-வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இவருக்கும் இவரது உறவினர் விஜய் என்பவருக்கும் கொடுக்கல், வாங்கல் தகராறு மற்றும் தேர்தல் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கலைவாணி வீட்டில் இருந்த போது உள்ளே நுழைந்த விஜய் அவரை அரிவாள்மனையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கலைவாணி அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கலைவாணி கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான விஜய்யை வலைவீசி தேடி வருகின்றனர்.