நகை தொழிலாளியை தாக்கியவர் கைது
விழுப்புரத்தில் நகை தொழிலாளியை தாக்கியவர் கைது
விழுப்புரம்
விழுப்புரம் அருணாசலம் முதலியார் தெருவை சேர்ந்தவர் பஞ்சநாதன்(வயது 53), நகை தொழிலாளி. இவரும் விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலையை சேர்ந்த ராஜேந்திரன்(43) என்ற நகை தொழிலாளியும் உறவினர்கள் ஆவர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஒன்றாக இணைந்து நகை செய்யும் தொழில் செய்து வந்தனர். அப்போது 50 கிராம் தங்கம் வாங்கி நகை செய்யும்போது நஷ்டம் ஏற்பட்டு ராஜேந்திரன், புதுச்சேரிக்கு சென்று தங்கினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் வந்த அவர், பஞ்சநாதனிடம் சென்று தனக்கு சேர வேண்டிய 25 கிராம் தங்கத்தை கேட்டு அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பஞ்சநாதன் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.