தம்பதியை தாக்கியவர் கைது
சிவகாசியில் தம்பதியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி பள்ளப்பட்டி முருகன் காலனியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கும் அதே பகுதியில் வசித்து வரும் மகேந்திரன் (வயது22) என்பவரின் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கணேசன், முனியம்மாள் ஆகியோர் தங்களது வீட்டின் முன்பு உட்கார்ந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த மகேந்திரன், கணேசனிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வந்த முனியம்மாளையும் தாக்கி கணவன், மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் முனியம்மாளுக்கு காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மீட்டு சென்று முனியம்மாளுக்கு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து முனியம்மாள் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனர்.