மகளை காதலித்த வாலிபரை தாக்கியவர் கைது
மகளை காதலித்த வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கோவை
மகளை காதலித்த வாலிபரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
காதல் பிரச்சினை
கோவை சுங்கம் பைபாஸ் ரோடு மதுரை வீரன் திட்டு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்(வயது 23). வெல்டிங் தொழிலாளி. இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். இதை அறிந்த இளம்பெண்ணின் குடும்பத்தார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தினேஷ்குமாருக்கும், இளம்பெண்ணின் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்கள், புலியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தினேஷ்குமாரை அழைத்து எச்சரித்து அனுப்பினர். அதன் பின்னரும் தினேஷ்குமாருக்கும், அவர் காதலித்த இளம்பெண்ணின் குடும்பத்தாருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
கைது
இந்தநிலையில் நேற்று தினேஷ்குமார் ரெயில் நிலைய ரோட்டில் உள்ள ஒரு வங்கி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளம்பெண்ணின் தந்தை நாகராஜ்(46) என்பவர் தினேஷ்குமாரை தாக்கி மிரட்டல் விடுத்தார். இது குறித்து தினேஷ்குமார் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தாக்குதல், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.