கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே உள்ள நாரயணபோர்த்தலை பகுதியை சேர்ந்தவர் ஷிஜிகுமார் (வயது 42). தே.மு.தி.க. கட்சியில் மாநில பேச்சாளராக இருந்து வந்த நிலையில் இவர், கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது தன்னை பா.ஜனதாவில் இணைத்து கொண்டு மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளராக செயல்பட்டு வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு ஷிஜிகுமார் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பாபு(52) என்பவர் ஷிஜிகுமாரை வழிமறித்து தகராறு செய்து அருகில் கிடந்த கல்லால் தாக்கி விட்டு தப்பிச் சென்றார். இதில் படுகாயமடைந்த ஷிஜிகுமார் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஷிஜிகுமார் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாபுவை கைது செய்தனர்.