மைத்துனரை தாக்கியவர் கைது

மைத்துனரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-09 17:37 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(வயது 39). விவசாயி. இவரது மனைவி சரளா (35). கணவன்-மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரளா தனது கணவரை விட்டு பிரிந்து அதே பகுதியில் உள்ள தனது தந்தை வீ்ட்டில் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சரளாவின் அண்ணன் மணிமாறன், ராஜீவ்காந்தி வீட்டிற்கு சென்று அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து மணிமாறனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்