பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை

பெண்ணை தாக்கியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-08-16 18:25 GMT

தென்காசி அருகே உள்ள ஆய்க்குடி சிவன் கோவில் தெருவை சேர்ந்த மூக்கன் செட்டியார் மகன் செல்லப்பா (வயது 63). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சுப்புலட்சுமி (63) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 24-11-2015 அன்று இருவருக்கும் தகராறு ஏற்படவே செல்லப்பா பொது இடத்தில் சுப்புலட்சுமியை அவமானப்படுத்தி கம்பால் தாக்கி அவரை கொன்று விடுவதாக மிரட்டினார்.

இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லப்பாவை கைது சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தென்காசி முதன்மை அமர்வு உதவி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரஸ்கின் ராஜ் குற்றவாளி செல்லப்பாவிற்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.3500 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் மாரிகுட்டி ஆஜர் ஆனார். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேல்கனி, ஏட்டு முருகேஸ்வரன் ஆகியோர் செல்லப்பாவை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்