பெண்ணை தாக்கிய ெகாழுந்தன் கைது
பெண்ணை தாக்கிய ெகாழுந்தன் கைது செய்யப்பட்டார்.
சிறுகனூர் அருகே உள்ள திருப்பட்டூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன்கள் மணிகண்டன் (வயது 30), கண்ணன் (31). மணிகண்டனுக்கு திருமணமாகி அனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கண்ணனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் இரும்பு கம்பியால் அனிதாவை தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து,மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தார்.