பெண்ணை தாக்கிய கொழுந்தனார் கைது

பெண்ணை தாக்கிய கொழுந்தனாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-21 18:45 GMT

தக்கலை:

தக்கலை அருகே உள்ள கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி சிந்து (வயது 30). முருகேசனின் தம்பி ரதீஷ்குமார் (37).

சிந்துவுக்கும், ரதீஷ்குமாருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று சிந்து வீட்டில் இருந்த நேரத்தில் அங்கு வந்த ரதீஷ்குமார் அவரை தாக்கியதோடு செல்போனை பிடுங்கி சேதப்படுத்தியுள்ளார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொழுந்தனார் ரதீஷ்குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்