மளிகை கடைக்கார பெண்ணை தாக்கியவர் கைது
கடனுக்கு பொருட்கள் தராததால் மளிகை கடைக்கார பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
மத்தூர்:-
போச்சம்பள்ளி தாலுகா கொடமாந்தப்பட்டி கூட் ரோட்டை சேர்ந்தவர் மாதேஸ்வரி (வயது 49). இவர், மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் (28) என்பவர் மாதேஸ்வரியின் கடைக்கு சென்று மளிகை பொருட்களை கடனுக்கு கேட்டார். அதற்கு கடனுக்கு பொருட்கள் கொடுக்க மாதேஸ்வரி மறுத்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயகாந்தன், மாதேஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அவர், மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயகாந்தனை கைது செய்தனர்.