கால்வாயில் இறந்து கிடந்தவர் அடையாளம் தெரிந்தது

கால்வாயில் இறந்து கிடந்தவர் அரக்கோணத்தை சேர்ந்த தொழிலாவி என தெரிந்தது.

Update: 2023-04-10 18:19 GMT

ஜோலார்பேட்டை ரெயில்வே ஜங்ஷன் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு அங்குள்ள சாக்கடை கால்வாயில் ஒருவர் தவறி விழுந்து இறந்து கிடந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரக்கோணம் முதூர் கிராமத்தை சேர்ந்த புஷ்பா என்பவர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று கால்வாயில்பிணமாக கிடந்தது தனது கணவர் ஜெய்சங்கர் (வயது 38) என்பதை உறுதி செய்தார். பெங்களூருக்கு கட்டிட வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் கால்வாயில் விழுந்து இறந்தது தெரிய வந்தது.

இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்