மாயமான பெண் காதல் கணவருடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
ஆரணியில் மாயமான பெண் காதல் கணவருடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்ம் ஆரணி லிங்கப்பன் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன், பள்ளி தலைமை ஆசிரியர். அவரது மகள் கீர்த்திகா (வயது 21). இவர், கடந்த 21-ந்தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கீர்த்திகாவை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆரணி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த அஜய் (25) என்பவருடன் கீர்த்திகா ஆரணி நகர காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
அப்போது அவர்கள், நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். தற்போது பதிவு திருமணம் செய்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து கீர்த்திகாவின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் கீர்த்திகா, கணவருடன் சென்றார்.