மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு திட்ட மதிப்பீடு ரூ.11,360 கோடியாக உயர்ந்தது

மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் திட்ட மதிப்பீடு ரூ.11 ஆயிரத்து 360 கோடியாக உயர்ந்துள்ளது.

Update: 2023-07-14 20:15 GMT


மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் திட்ட மதிப்பீடு ரூ.11 ஆயிரத்து 360 கோடியாக உயர்ந்துள்ளது.

மீனாட்சி அம்மன் கோவில்

சென்னையை போல மதுரை மற்றும் கோவை நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மதுரையில் மெட்ரோ ரெயில் எந்த பாதையில் அமைக்கலாம் என்பது குறித்து விரிவாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஆய்வு செய்தது. இறுதியாக ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை சுமார் 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் ஒரு மெட்ரோ நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

அதன் தொடர்ச்சியாக மீண்டும் கள ஆய்வு செய்யப்பட்டு 27 கிலோ மீட்டர் தூரம் என்பது 31 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் 27 ரெயில் நிறுத்தங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கோரிப்பாளையம், பெரியார் பஸ் நிலையம், மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய 3 நிறுத்தங்கள் சுரங்க பாதை ரெயில் நிலையங்களாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது மதுரையில் மெட்ரோ அமைப்பதற்கான முழு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

திட்ட மதிப்பீடு

இந்த திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக், தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் நேற்று வழங்கினார். அப்போது திட்ட இயக்குனர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டோன் எலிசர், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த திட்ட அறிக்கையின்படி மதுரை மெட்ரோ ரெயில் திட்ட மதிப்பீடு ரூ.8 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.11 ஆயிரத்து 360 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த அறிக்கை தமிழக அரசு முழுமையாக ஆய்வு செய்து ஓப்புதல் தரும். அதன்பின் மத்திய அரசிடம் அனுமதி மற்றும் நிதியுதவி பெற்று பணிகள் தொடங்கப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்