காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

நாட்டறம்பள்ளி அருகே காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

Update: 2023-08-21 17:54 GMT

நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் குமரேசன் (வயது 23). டிரைவராக வேலைபார்த்து வருகிறார். அங்கிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்த சற்குணம் மகள் தரிஷினி (19). அதே பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வருகின்றார். குமரேசனின் சகோதரியும் அதே கல்லூரியில் பயின்று வருவதால், அவரை குமரேசன் கல்லூரிக்கு அழைத்து சென்று வந்தார். அப்போது குமரேசனுக்கும், தர்ஷினிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி பகுதியில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். பின்னர் அவர்கள் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் இருவரின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை வழங்கினர். இதனையடுத்து காதல் ஜோடி வீட்டிற்கு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்