லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்
கம்பத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் தாத்தப்பன் குளம் புதுப்பாலம் அருகே வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த கம்பம் தாத்தப்பன் குளத்தை சேர்ந்த நிஜாம் (வயது 50) என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்த 56 கேரள மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.700-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நிஜாமை கைது செய்தனர்.