லாரியின் டயர்கள் வெடித்து சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
அருப்புக்கோட்டையில் நெல் மூடைகளை ஏற்றி சென்ற லாரியின் டயர்கள் வெடித்து சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் நெல் மூடைகளை ஏற்றி சென்ற லாரியின் டயர்கள் வெடித்து சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
டயர் வெடித்தது
ராஜபாளையத்தில் இருந்து ரேஷன் பயன்பாட்டிற்காக நெல் மூடைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தினேஷ் என்பவர் ஓட்டிச் சென்றார்.
அப்போது அருப்புக்கோட்டை வழியாக லாரி சென்று கொண்டிருக்கும்போது நகரின் முக்கிய சந்திப்பான பாம்பே மெடிக்கல் சந்திப்பில் திடீரென லாரியின் பின்பக்க 2 டயர்களும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் லாரி மேற்ெகாண்டு செல்ல முடியாமல் நடுவழியில் அங்கேயே நின்றது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, மதுரை செல்லும் பஸ்களும், வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து வாகனங்களை மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தினர். இதனால் பயணிகள் குழப்பம் அடைந்தனர். 4 மணி நேரத்திற்கு பின் இரண்டு டயர்களும் மாற்றப்பட்டு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. நகரின் மையத்தில் நீண்ட நேரம் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் சிரமம் அடைந்தனர்.