30 அடி கல்குவாரி பள்ளத்திற்குள் கவிழ்ந்த லாரி

30 அடி கல்குவாரி பள்ளத்திற்குள் கவிழ்ந்த லாரி

Update: 2023-08-04 18:45 GMT

தக்கலை:

தக்கலை அருகே வலியாற்றுமுகம் பகுதியில் ஒரு கல்குவாரி உள்ளது. இங்கு கல்லங்குழியை சேர்ந்த லாசர் மகன் விஜயராஜன் (வயது 37) என்பவர் டிப்பர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு லாரியை அவர் பின்னோக்கி இயக்கிய போது எதிர்பாராதவிதமாக 30 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.

இதில் டிரைவர் விஜயராஜன் படுகாயமடைந்தார். இடுப்பு, கால் ஆகிய இடங்களில் முறிவு ஏற்பட்டு லாரியின் அடியில் சிக்கி கொண்டார். உடனே அங்கு பணியாற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக சுங்கான்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த கொற்றிக்கோடு போலீசார் சம்பந்தப்பட்ட கல்குவாரிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்