மணல் அள்ளி சென்ற லாரி டிரைவர் கைது

கேரளாவுக்கு மணல் அள்ளி சென்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-09 18:45 GMT

தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அனுமதி சீட்டு இல்லாமல் கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கனிமவளங்கள் கடத்தப்படுவதாக தேனி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்பம்மெட்டு சோதனை சாவடியில் உதவி புவியியலாளர் பாண்டியராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா மாநில பதிவு எண் கொண்ட டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தனர். அந்த லாரியில் கலாவதியான அனுமதிச்சீட்டு வைத்து எம்-சாண்ட் மணலை கேரளாவுக்கு அள்ளி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசில் பாண்டியராஜன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரள மாநிலம் மேரிகுளத்தை சேர்ந்த லாரி டிரைவர் வர்கீஸ் (வயது 46) என்பவரை கைது செய்தனர். லாரி உரிமையாளரான சிண்டோவை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்