மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.;

Update: 2023-08-30 02:25 GMT

மறைமலைநகர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட சட்டமங்கலம் கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி (வயது 46). கூலித்தொழிலாளி.

இவரது கணவர் சென்னையில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு பூங்கொடி வேலைக்கு சென்று விட்டார். இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் நகை, ரூ.47 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து பூங்கொடி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்