கோழிகள் ஏற்றி வந்த லோடு ஆட்டோ குளத்துக்குள் கவிழ்ந்தது

களக்காட்டில் கோழிகள் ஏற்றி வந்த லோடு ஆட்டோ குளத்துக்குள் கவிழ்ந்தது.

Update: 2023-05-27 19:59 GMT

களக்காடு:

களக்காடு-சேரன்மாதேவி சாலையில் நேற்று காலை கோழிகள் ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லோடு ஆட்டோ நாகன்குளத்தின் கரையில் வந்தபோது திடீரென நிலை தடுமாறிய குளத்துக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் லோடு ஆட்டோ டிரைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் ஆட்டோவில் இருந்த கோழிகளும் எந்த பாதிப்பும் இன்றி தப்பின.

அந்த வழியாக வந்தவர்கள், விபத்தில் காயம் அடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். களக்காடு போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு லோடு ஆட்டோ மீட்கப்பட்டது. அதன்பிறகு கோழிகள் வேறு லோடு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்