சிறுமி மாயம்

சிறுமி மாயம் ஆனார்.;

Update: 2023-05-20 18:44 GMT

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் பஜனைமட தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மனைவி வாசுகி. இந்த தம்பதியின் மகள் ஹனிஸ்ரீ (வயது 17). இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு தற்போது நடைபெற்ற நீட் தேர்வு எழுதி இருந்தார். இதில் அவர் குறைவான மதிப்பெண்கள் தான் எடுப்பேன் என்று கூறி மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற ஹனிஸ்ரீ வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து ஹனிஸ்ரீயின் தாய் வாசுகி கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்