சிறுமி மாயம்

சிறுமி மாயம் ஆனார்.

Update: 2023-04-13 19:09 GMT


குளித்தலை அருகே உள்ள ஆணை கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சந்தியா (வயது 17). இவர் சம்பவத்தன்று ஆடு மேய்க்க செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் மாலை நெடுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சந்தியாவை அவரது பெற்றோர் உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களிலும், அக்கம், பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சங்கர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான சந்தியாவை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்