சிறுமி மாயம்

சிறுமி மாயமானாள்.

Update: 2023-02-17 19:26 GMT

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கார்குடி காலனி தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ராணி(வயது 44). இந்த தம்பதிக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களது மகள் அபிநயா(16) 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 15-ந் தேதி இரவு அபிநயா வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தா.பழூர் போலீசில் ராணி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்