குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-07 19:23 GMT

சேலம்:

சேலம் உடையாப்பட்டி கந்தாஸ்ரமம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 40). இவர் கடந்த மாதம் 7-ந் தேதி உடையாப்பட்டி டன்லப் ஜங்சன் அருகே நடந்து சென்ற அம்மாபேட்டையை சேர்ந்த ஜெகன் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,000 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றார். இதுதொடர்பாக அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளையனை கைது செய்தனர்.

தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து வெள்ளையனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில் வெள்ளையனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான கடிதத்தை போலீசார் சிறையில் உள்ள வெள்ளையனிடம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்