5ஜி அறிமுகம் அனைத்து இந்தியர்களுக்கும் தொலைத்தொடர்பு துறையின் பரிசு - பிரதமர் மோடி

நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் முன் 5ஜி இணையத்தின் மாதிரியை காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது

Update: 2022-10-01 07:46 GMT

புதுடெல்லி,

இந்திய மொபைல் காங்கிரசின் 4 நாள் மாநாடு, புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று நடைபெற்றது. 'இந்தியா மொபைல் காங்கிரஸ்-2022' மாநாட்டின் தொடக்க விழாவில், இன்று பிரதமர் நரேந்திர மோடி 5ஜி இணையத்தை முறைப்படி காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார்.

நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் முன் 5ஜி இணையத்தின் மாதிரியை காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 5ஜி அடிப்படையிலான டிரோன்கள், கழிவுநீர் கண்காணிப்பு அமைப்புகள், சுகாதாரம் தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் இணைய பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்கள் மூலம் விவசாயத்தின் தொழில்நுட்பத்தையும் அவர் மேற்பார்வையிட்டார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:

5ஜி அறிமுகமானது 130 கோடி இந்தியர்களுக்கு தொலைத்தொடர்பு துறையின் பரிசு. இது நாட்டில் புதிய சகாப்தத்தை நோக்கிய ஒரு படியாகும்,

உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னெடுப்போம்.டிஜிட்டல் இந்தியாவின் வெற்றியானது சாதனத்தின் விலை, டிஜிட்டல் இணைப்பு, தரவு செலவுகள் மற்றும் டிஜிட்டல் முதல் அணுகுமுறை உள்ளிட்ட 4 தூண்களை அடிப்படையாகக் கொண்டது. அவை அனைத்திலும் நாங்கள் வேலை செய்தோம்:

நாட்டின் ஏழைகள் கூட எப்போதும் புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற முன்வருவதை நான் பார்த்திருக்கிறேன்... தொழில்நுட்பம் அதன் உண்மையான அர்த்தத்தில் ஜனநாயகமாகிவிட்டது.முன்னதாக, 1ஜிபி டேட்டாவின் விலை சுமார் ரூ.300 ஆக இருந்தது, தற்போது ஒரு ஜிபிக்கு ரூ.10 ஆக குறைந்துள்ளது. சராசரியாக, இந்தியாவில் ஒரு நபர் மாதத்திற்கு 14 ஜிபி பயன்படுத்துகிறார். இதற்கு மாதம் ரூ.4200 செலவாகும் ஆனால் ரூ.125-150 செலவாகும். அரசின் முயற்சியே இதற்கு வழிவகுத்தது.

டிஜிட்டல் இந்தியா ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு இடத்தை அளித்துள்ளது. சிறிய தெரு வியாபாரிகள் கூட யுபிஐ வசதியைப் பயன்படுத்துகின்றனர். என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்