இளம்பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

புளியங்குடி அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2023-04-17 22:29 GMT

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் மகாராஜா (வயது 27). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு சேவு மிக்சர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவருக்கு 24 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதி அந்த பெண்ணை மகாராஜா பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஜாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி பத்மநாபன் வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட மகாராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் கந்தசாமி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்