ஏழுமலையானின் கையில் கஜானா சாவி... கணக்கு வழக்கு ஒப்படைப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, ஸ்ரீரங்கம் சார்பில் பட்டு வஸ்திரம் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்டது.;

Update: 2023-07-17 16:47 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, ஸ்ரீரங்கம் சார்பில் பட்டு வஸ்திரம் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்டது.

திருமலை கோவில் வளாகத்தில் உள்ள கருடன் சன்னதி முன், உற்சவரான மலையப்பர், முன்னிலையில், வருடாந்திர கணக்கு வழக்குகள் ஒப்பிக்கப்பட்டன. இதையடுத்து, கோவில் கஜானா சாவி சம்பிரதாய ரீதியாக ஏழுமலையான் திருகரங்களில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, திருமலை கோவிலில் பழைய வரவு-செலவு கணக்கை முடித்து, பக்தர்களிடம் காணிக்கை பெற்று புதிய வரவு-செலவு கணக்கு தொடங்கப்பட்டது.

முன்னதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், ஸ்ரீரங்கம் சார்பில் பட்டு வஸ்திரம், மங்கள பொருட்கள் ஆகியவை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனிவார ஆஸ்தானத்தை ஒட்டி, இன்று புஷ்ப பல்லக்கு வீதிஉலா நடந்தது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்