கோர்ட்டு வளாகத்தில் மனைவியை தாக்கியவரை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி

அருப்புக்கோட்டையில் கோர்ட்டு வளாகத்தில் மனைவியை தாக்கியவரை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.;

Update: 2022-06-24 19:28 GMT

அருப்புக்கோட்டை, 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது40). 20 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், திருவிருந்தாள்புரத்தை சேர்ந்த வேல்முருகன் (56) என்பவருக்கும் திருமணம் முடிந்ததாகவும், கடந்த 12 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு அருப்புக்கோட்டை கோர்ட்டில் ஜெயலட்சுமி தொடர்ந்த வழக்கில் ஜீவனாம்சமாக ஜெயலட்சுமிக்கு வேல்முருகன் மாதம் ரூ.10 ஆயிரம் தரவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கு முடிந்தபின் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த ஜெயலட்சுமியை பின் தொடர்ந்து சென்ற வேல்முருகன், கோர்ட்டு வளாகத்திலேயே ஜெயலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த நீதிபதி முத்துஇசக்கி, நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியை தாக்கிய வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அருப்புக்கோட்டை நகர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்