டீக்கடையில் தவறிவிட்டவரின் நகைகள் போலீசாரிடம் ஒப்படைப்பு

டீக்கடையில் தவறிவிட்டவரின் நகைகள் போலீசாரிடம் வியாபாரிகள் ஒப்படைத்தனர்.;

Update: 2022-11-30 10:00 GMT

ஆரணி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டீக்கடையில் நேற்று யாரோ ஒருவர் அரைபவுன் நகையை தவறவிட்டு சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற மணி பர்ஸ் விற்பனை செய்து வரும் வெள்ளேரி கிராமத்தைச் சேர்ந்த ஷெரிப் (வயது 58), புது பஸ் நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வரும் முருகேசன் ஆகியோர் டீக்கடைக்காரரிடம் தெரிவித்து அதனை மீட்டனர்.

பின்னர் ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜனிடம் உரியவரிடம் வழங்க வேண்டும் என கூறி அதனை ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்