இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நகை மாயம்

விருதுநகரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நகை மாயமானது.;

Update: 2022-09-24 19:55 GMT

விருதுநகர் அருகே உள்ள முதலிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகை செல்வம் (வயது 31). இவர் வத்திராயிருப்பு அருகே உள்ள நல்லூர் பட்டியில் வசிக்கும் தனது உறவினர் ராசாத்தி என்பவர் வீட்டில் கொடுத்து வைத்திருந்த 9 பவுன் நகைகளை பெற்றுக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தனது உறவினர்கள் மகேஸ்வரன் மற்றும் ராஜகுமாருடன் முதலிப்பட்டி திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில் ஜி.என்.பட்டி அருகே மழை பெய்ததால் அருகில் உள்ள ஒரு பட்டாசு கடையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தனர். மழை விட்ட பிறகு இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நகை பையை காணவில்லை. இதுபற்றி அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கார்த்திகைச்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்