பல்லடம் கிளைச்சிறையின் சுற்றுச்சுவர் உயரம் அதிகரிப்பு

பல்லடம் கிளைச்சிறையின் சுற்றுச்சுவர் உயரம் அதிகரிப்பு

Update: 2023-09-24 10:50 GMT

பல்லடம்

பல்லடம் காந்தி ரோட்டில் அமைந்துள்ள கிளைச்சிறை சுமார் 150 ஆண்டுகள் பழமையானது. கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் சிறுவர் சீர்திருத்த பள்ளியாக கிளைச்சிறை செயல்பட்டு வந்தது. பின்னர் மூடப்பட்ட அந்த சிறை வளாகம் சுமார் 21 ஆண்டுகள் மூடப்பட்டு பயன்பாடு இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 16.7.2021 அன்று கிளைச்சிறை மீண்டும் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது வரை இங்கு கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே தற்போது சிறை வளாகத்தின் சுற்றுச்சுவர்கள் சுமார் 3 அடி உயரம் அதிகரிக்கப்பட்டு அதன் மேல் இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக சிறை வளாகத்தின் சுற்றுச்சுவர் உயரம் அதிகரிக்கப்பட்டு கம்பி வேலி அமைக்கப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்