குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் - சென்னை ஐகோர்ட் அதிரடி

வழக்கு தொடர்பாக 147 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாக கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2023-03-21 09:18 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

ஆனால், இந்த சம்பவம் நடந்து 90 நாட்கள் கடந்த நிலையில், இதுவரை ஒருவர் கூட கைதுசெய்யப்படவில்லை என்றும், சிபிஐ அதிகாரிகள் பெயரளவிலேயே விசாரணை நடத்துவதாக ராஜ்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரனை இன்று நடைபெற்றபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை விசாரணை செய்யக்கூடிய புலன் விசாரணை அதிகாரிகளின் அறிக்கையை தாக்கல்செய்தார்.

மேலும், வழக்கு தொடர்பாக 147 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை ஏன் நியமிக்கக்கூடாது என்ற கேள்வியை எழுப்பினர். இந்த வழக்கில் உத்தரவுக்காக தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்