படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு

வடமதுரை அருகே கேரம் போர்டு விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2023-01-12 18:45 GMT

வடமதுரை அருகே உள்ள புதுகலராம்பட்டியை சேர்ந்தவர் பொன்னர் (வயது 25). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் கடந்த 9-ந்தேதி அதே பகுதியில் உள்ள நாடக மேடை அருகே தவமணி (24) என்பவருடன் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தவமணி தனது உறவினர்களுடன் சேர்ந்து பொன்னரை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பொன்னரை அவரது உறவினர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அதன்பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து தவமணி, சுபாஷ் (27), மகாலட்சுமி (27), பகவதி (19) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று பொன்னர் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த பொன்னருக்கு நதியா என்ற மனைவியும், யுவஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்