விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு
நெல்லையில் நடந்த விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் நரசிங்கன்விளையை சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன் மகன் முத்துராஜா (வயது 24). இவர் கடந்த 14-ந் தேதி குரும்பூரை சேர்ந்த மகேஷ்குமார் (22), நாசரேத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் (31) ஆகியோருடன் நெல்லை கிருஷ்ணாபுரம் அருகே மேட்டுக்குடி விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக முத்துராஜா ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முத்துராஜா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மற்ற 2 பேரும் படுகாயத்துடன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மகேஷ் குமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.