விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சாவு
விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
மானூர்:
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ் மகன் இசக்கிதுரை (வயது 20) என்பவரும், மானூர் அருகே உள்ள கம்மாளங்குளத்தை சேர்ந்த இருதயராஜ் மகன் கனகராஜ் (21) என்பவரும் கடந்த 7-ந் தேதி துலுக்கர்பட்டியில் இருந்து நரியூத்து நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர். கனகராஜ் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். நரியூத்து ஊருக்கு மேல்புறம் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இசக்கிதுரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.