விபத்து வழக்கில் மறுவிசாரணை கோரி காயமடைந்தவர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

விபத்து வழக்கில் மறுவிசாரணை கோரி காயமடைந்தவர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-09-13 18:15 GMT

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியை சேர்ந்தவர் நடேசன் (வயது 42). இவர் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவிடம் நேற்று ஒரு புகார் மனு அளித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் மோட்டார் சைக்கிளில் கட்டுமாவடி-அறந்தாங்கி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது கோவில்வயல் கிராமம் அருகே ஒரு கார் அதிவேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நான் படுகாயமடைந்தேன். எனது வலது கால், வலது முழங்கைக்கு மேல் வெட்டுபட்டு துண்டானது. விபத்தில் காரை ஓட்டி வந்த ஸ்டாலின் என்பவரின் தந்தை இறந்தார். அவரது தாய் படுகாயமடைந்தார். இந்த விபத்தில் என் மீது வழக்குப்பதிவு செய்து முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் எனக்கு வலது கால், கை போய்விட்டது. விபத்து நடந்த பின் நான் மருத்துவமனையில் இருந்ததால் காரை ஓட்டிவந்தவர் கொடுத்த புகாரின் பேரில் ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஏற்கனவே மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அதனால் இந்த வழக்கை மறுவிசாரணை செய்து விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளேன். போலீஸ் சூப்பிரண்டும் விசாரணை நடத்துவதாக தெரிவித்தார்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்