விபத்தில் காயம் அடைந்தவர் சாவு

விபத்தில் காயம் அடைந்தவர் இறந்தார்.

Update: 2023-07-24 19:11 GMT

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தலாங்குறிச்சி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் செல்லபாண்டியன் மகன் வண்டி மலையான் (வயது 27). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 22-ந்தேதி வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் நெல்லை அருகே கிருஷ்ணாபுரத்தில் வந்த போது, அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வண்டிமலையான் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலன்அளிக்காமல் உயிர் இழந்தார். இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்