விபத்தில் காயம் அடைந்தவர் சாவு
திருமருகல் அருகே விபத்தில் காயம் அடைந்தவர் சாவு
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 40). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 7-ந் தேதி இரவு 7 மணியளவில் திருக்கண்ணபுரத்தில் இருந்து தென்னமரக்குடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அந்த சாலையில் திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரவிச்சந்திரன் கீழே விழுந்தார். இதில் அவரது தலை, முகத்தில் இரத்த காயம் ஏற்பட்டு சாலையில் மயங்கி கிடந்துள்ளார். அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ரவிச்சந்திரனை மீட்டு ஆம்புலன்சில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் ரவிச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.