விபத்தில் காயமடைந்த விவசாயி சாவு
மூலைக்கரைப்பட்டியில் விபத்தில் காயமடைந்த விவசாயி இறந்தார்
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி கடம்பன்குளத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 55) விவசாயி. இவர் தீபாவளியன்று அம்பலம் ஊரில் இருந்து மூலைக்கரைப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.