பாகுபலி யானையின் உடல்நிலை குறித்து வனத்துறை வெளியிட்ட தகவல்

பாகுபலி யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.;

Update: 2023-07-07 13:29 GMT

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், பாகுபலி காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து கூடுதல் பாதுகாப்புக்காக வந்த வனப்பணியாளர்கள் அந்தந்த வனச்சரங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

2 மோப்ப நாய்களும் போளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அரசு மரக்கடங்கு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யானைகள் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் மேற்பார்வையில் பத்திரமாக லாரியில் ஏற்றப்பட்டு மீண்டும் முதுமலை புலிகள் காப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 

Full View


Tags:    

மேலும் செய்திகள்