இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்

Update: 2022-08-22 13:20 GMT

திருச்சி மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் மந்தமாக நடைபெறுவதை விரைவுப்படுத்த வேண்டும். தெருநாய்கள், பன்றி, மாடுகள் சாலைகளில் திரிவதை கட்டுப்படுத்த வேண்டும். கலங்கலாக வரும் குடிநீரை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று காலை திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். மாநகர் மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேதுபதி முன்னிலை வகித்தார். இவர்களில் ஒரு சிலர், தலை, கைகளில் கட்டுப்போட்டு கொண்டு தெருக்களில் சுற்றித்திரியும் விலங்குகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கும் வகையிலும், பன்றி, நாய், மாடு போன்ற விலங்குகளின் புகைப்படங்களை கையில் வைத்து கொண்டும் நூதனமாக போராட்டம் நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 பேர் மட்டும் மாநகராட்சி அலுவலகத்துக்குள் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். இந்த போராட்டத்தையொட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், சேரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்