சுதந்திர தின விழா கோலாகலம்

நெல்லை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-08-15 19:48 GMT

இட்டமொழி:

நெல்லை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சுதந்திர தின விழா

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கோகாலகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தின விழாவையொட்டி, பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள தனது இல்லத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். விழாவில் ராணுவ அதிகாரிகள், தேசிய மாணவர் படை அதிகாரிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

பாளையங்கோட்டை யூனியன் அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் பரிசுகளையும், பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், ஆ.சு.மணி மற்றும் யூனியன் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூடங்குளம்

கூடங்குளம் இந்து நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஞா.மி.ஜோசப் பெல்சி தலைமை தாங்கி தேசிய கொடியினை ஏற்றிவைத்து மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி பேசினார். பள்ளி தாளாளர் ராஜா கணேஷ் வரவேற்றார். பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ராஜசேகர் நன்றி கூறினார்.

திசையன்விளை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கி தேசிய கொடியேற்றினார். விழாவில் துணைத்தலைவர் ஜெயக்குமார், கவுன்சிலர்கள் கமலா சுயம்புராஜன், லிவியா சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வள்ளியூர்

வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரியில் நடந்த விழாவுக்கு கல்லூரி தாளாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். முதல்வர் மார்க்ரெட் ரஞ்சிதம் வரவேற்று பேசினார். கல்லூரி தலைவர் ஹெலன் லாரன்ஸ் தேசிய கொடிேயற்றி, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

தொடர்ந்து வினாடி-வினா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர் பட்டிமன்றம் நடந்தது. துணை முதல்வர் பேபி உமா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்