கோவையில் வருமான வரித்துறையினர் 4 வது நாளாக சோதனை...!

திமுக பிரமுகர் வீட்டில் நான்காவது நாளாக வருமான வரி சோதனை.

Update: 2023-05-29 06:54 GMT

கோவை,

கோவையில்திமுக பிரமுகர் செந்தில் கார்திகேயன் வீட்டில் கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய வருமானவரி சோதனையானது தொடர்ந்து 4வது நாளாக நடைபெற்று வருகிறது.கோவை, ஈரோடு,கரூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 26 ஆம் தேதி சோதனையை தொடங்கினர்.

இந்நிலையில் 4 வது நாளான இன்று கரூர் உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை தொடர்வதாக திட்டமிட்டுள்ளனர். தற்போது கரூர் மாவட்டம் காந்திகிராமத்திலுள்ள பிரேம்குமார் சோபனா தம்பதியினர் இல்லத்தில் வருமானவரித்துறையினர் துப்பாக்கி ஏந்திய போலீஸ்பாதுகாப்புடன் சோதனையை தொடங்கினர்.

இதைபோல் பல்வேறு இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் 4வது நாளாக சோதனையை தொடர்ந்து நடத்திவருகின்றனர். மேலும் கரூர் மாவட்டதில் சீல் வைக்கப்பட்ட இடத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையை நடத்திவருகின்றனர்.மேலும் மூன்று நாட்களாக நடந்து வந்த சோதனையில் முக்கிய ஆவணங்கல் மற்றும் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெறிவித்துள்ளனர்.


Full View

Tags:    

மேலும் செய்திகள்