தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-10-17 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க தொடக்க விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடியில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தொடக்க விழா

அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவப்படங்களுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சத்யா, யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, நகர செயலாளர் விஜய பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சாயர்புரம்

சாயர்புரம் மெயின் பஜாரில் நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 52-வது ஆண்டு தொடக்்க விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும,் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அனைவருக்கும் அவர் இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் இரும்பு ஆர்ச் பகுதியில் அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழா நகர அ.தி.மு.க. சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட பிரதிநிதி ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர்் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி

அ.தி.மு.க. கட்சி 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள கொடி கம்பத்திலும், ஆறுமுகநேரி ஸ்டேட் வங்கி அருகில் உள்ள கொடி கம்பத்திலும் அ.தி.மு.க.வினர் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். இதேபோல் காயல்பட்டினம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள கொடி கம்பத்தில் நகர செயலாளர் காயல் மவுலானா, நகர துணை செயலாளர் பூந்தோட்டம் மனோகரன் முன்னிலையில் கட்சிகொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில்சார்பு அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்