இறந்த மனைவிக்கு வீட்டில் சிலை வைத்த கணவர்

இறந்த மனைவிக்கு வீட்டில் சிலை வைத்த கணவர்

Update: 2023-09-10 20:24 GMT


மதுரை அண்ணாநகர் வைகை காலனியை சேர்ந்தவர் மார்கண்டன் (வயது 83). இவர், பொதுப்பணித்துறையில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மேலும் பேரன், பேத்திகள், கொள்ளு பேத்திகளும் உள்ளனர். இந்தநிலையில் ருக்மணி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு இறந்தார். மனைவியின் பிரிவால் மார்கண்டன், மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதற்கிடையே, மனைவியின் நினைவாக, அவருக்கு சிலை அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டார். அதன்படி, ரூ.5 லட்சம் செலவில் மனைவி ருக்மணிக்கு மெழுகு சிலை செய்தார். அதை தனது வீட்டிலேயே வைத்து வணங்கி வருகிறார். மனைவி இறந்த பின்னர் அவர் தன்னுடன் வாழ்வதாக எண்ணும் கணவர், இந்த காலத்தில் ஆச்சர்யமான ஒரு நிகழ்வுதான்.

Tags:    

மேலும் செய்திகள்