சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி சின்னமனை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது65). இவர் தனது மகன் சுரேஷ்குமார் (35), மருமகள் வளர்மதி (30) ஆகியோருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மின்கசிவு காரணமாக சுப்பையா குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே வந்தனர். வளர்மதி தொட்டிலில் கிடந்த தனது 2½ வயது குழந்தையை காப்பாற்ற சென்றபோது அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. தீக்காயம் அடைந்த அவர் அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த ரூ. 1லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.