மின்கசிவால் வீட்டில் தீப்பிடித்தது

Update:2023-03-07 01:53 IST

சேலம் திருமலைகிரி பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 65). இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு, வெளியே சென்றார். மதியம் அவர் வீட்டில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் வீட்டில் இருந்த கார், டி.வி., பிரிட்ஜ், கட்டில், மெத்தை, கணினி மற்றும் பொருட்கள் எரிந்து சேதமாகின. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்