ஓட்டல் தீயில் எரிந்து நாசம்

ஓட்டல் தீயில் எரிந்து நாசமானது.

Update: 2023-07-24 17:54 GMT

திருமயம் சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சூசைராஜ். இவர் திருமயம்-காரைக்குடி சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு ஓட்டலில் பணிகள் முடிந்த நிலையில் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், இன்று காலையில் ஓட்டலில் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் திருமயம் தீயணைப்பு நிலையத்திற்கும், சூசைராஜிக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் ஓட்டல் எரிந்து நாசமானது. மேலும் அருகே உள்ள கடைகளில் தீப்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்